* மாவட்டம் : திண்டுக்கல்
* இடம் : கொடைக்கானல்
* முகவரி : கொடைக்கானல், திண்டுக்கல்.
* தாலுகா : கொடைக்கானல்
வரலாறு :
கொடைக்கானல் காட்டுயிர் உய்விடம், பழனி மலையில் காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. இது திண்டுக்கல், தேனி மாவட்டப் பகுதியில் 608.95 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. 20 ஆண்டுகாலப் பரிந்துரைகளுக்குப் பிறகு 2013-ல் துவக்கப்பட்டது.
காட்டு வகைகள் :
முட்புதர் காடு, இலையுதிர் காடு, பசுமைமாறாக் காடு, மழைக்காடு, சோலைக்காடு, மலையுச்சிப் புல்வெளி எனப் பலவகையான காடுகள் உள்ளன.
உயிரினங்கள் :
யானை, வேங்கைப்புலி, சிறுத்தை, செந்நாய், கரடி, வரையாடு, நரை அணில், மலபார் மலையணில், கடமான், காட்டெருது உள்ளிட்ட பல வகை பாலூட்டி இனங்களும், பல அரியவகைத் தாவர இனங்களும், 100 வகை பறவையினங்களும் இங்கு காணப்படுகின்றன.
மேற்குத் தொடர்ச்சி மலையின் ஓரிடவாழ் பறவைகளான நீலகிரி காட்டுப்புறா, நீலகிரி நெட்டைக்காலி, குட்டை இறக்கையன் போன்ற அரியவகைப் பறவைகளும் இப்பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிறப்புகள் :
* இயற்கைத் தென்றல் அரவணைக்கும் மலைப்பகுதி...
* மூலிகைச் செடிகளும் சந்தன மரங்களும்...
* அடர்ந்த காட்டுப்பகுதி...
* அச்சத்தை தரும் விலங்கினங்கள்...
* குழந்தைகளை குதூகலமாக்கும் பூங்காக்கள்...
* அரியவகைத் தாவர இனங்கள்...
போக்குவரத்து :
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து நிறைய பேருந்துகள் கொடைக்கானலுக்கு இயக்கப்படுகின்றன.
குறைந்த செலவில் நிறைவான சுற்றுலாவுக்கு குடும்பத்தோடு சென்றுவர கொடைக்கானல் காட்டுயிர் உய்விடம் உகந்தது.
கருத்துகள் இல்லை