* மாவட்டம் : திண்டுக்கல்
* இடம் : கொடைக்கானல்
* முகவரி : கொடைக்கானல், திண்டுக்கல்.
* தாலுகா : கொடைக்கானல்
வரலாறு :
அழகிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான இந்த பம்பர் அருவி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அமைந்துள்ளது. இதனை லிரில் அருவி என்றும் அழைக்கப்படுகிறது.
பம்பர் ஹவுஸ் பின்புற வழியில் உள்ள ஒரு செங்குத்துச் சரிவின் வழியாக இந்த அருவியை அடையலாம்.
இந்த அருவியிலிருந்து தண்ணீர் கீழ்ப்பாய்ந்து, வரிசையான பாறைகள் வழியே வளைந்து நெளிந்து பொங்கி வரும் அழகு வசீகரத்தின் உச்சக்கட்டம்.
இது அருவியாக பாய்ந்து தென்பகுதி நோக்கி ஓடும் வைகை ஆற்றில் இணைகிறது.
இங்கு பள்ளத்தாக்கு, நீர் பாய்ச்சல், செங்குத்தான மற்றும் வழுக்கும் பாறைகள் தொடர்ச்சியாக உள்ளது.
இயற்கை சூழல் காரணமாக, இயற்கை ரசிகர்களின் மத்தியில் நிலையான புகழை இந்த அருவிப் பெற்று வருகிறது.
சிறப்புகள் :
* பசுமையான மரங்கள்...
* அரிதான தாவரங்கள்...
* வனப்பகுதி விலங்குகள்...
* அடர்ந்த பறவைகள்...
* கூட்டம் கூட்டமான பட்டாம்பூச்சிகள்...
* கரடுமுரடான மலைகள்...
* குளிர்ச்சியான குளியல்...
* மகிழ்ச்சியான நீச்சல்...
* சாகச மலையேற்றம்...
* உருட்டல் பள்ளத்தாக்குகள்...
எப்படி அடையலாம்?
கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள இந்த பம்பர் அருவியை பேருந்தின் மூலம் அடையலாம்.
பம்பர் அருவி, இயற்கையை பிரவேசிக்க விரும்பும் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமாகும்.
கருத்துகள் இல்லை