* மாவட்டம் : திருநெல்வேலி
* இடம் : குற்றாலம்
* முகவரி : குற்றாலம், திருநெல்வேலி
* தாலுகா : தென்காசி
வரலாறு :
குற்றால அருவி, தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்ட குற்றாலம் பேரூராட்சியில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளவை. இது தென்னகத்தின் ஸ்பா என்றழைக்கப்படுகிறது. இது தென்காசியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
குற்றால அருவி நீர் பல்வேறு மூலிகைகளில் கலந்து வரும் தண்ணீர் ஆதலால் இதில் நீராடுவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. அருவிக்கரையில் சிவன் சன்னதி உள்ளது. ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழும்.
ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது. முக்கிய அருவி எனப்படும் பேரருவியில் பெண்கள் குளிப்பதற்கு தனியான இடம் அமைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை