பொதுவான தகவல்கள் - பொதுவான நில அளவுகள்
நில அளவுகள்
* நமது முன்னோர் காலத்தில் நிலத்தினுடைய அளவுகள் பேச்சு வழக்கு முறையில் குழி, வேலி, மா என கூறப்பட்டது. அளவீடு முறையில் ஏக்கர், ஹெக்டர் என குறிப்பிடப்பட்டது.
* பொதுவாக வீட்டு மனைகள் சதுர அடி என்ற அளவீட்டில் குறிப்பிடுவது என்பது நடைமுறை வழக்கத்தில் உள்ளது. மேலும் நகர்புறங்களில் கிரவுண்ட் என்றும் கூட அழைக்கப்படுகிறது.
* தற்போது வீட்டு மனைகள் சதுர அடி, சென்ட், கிரவுண்ட் போன்ற அளவுகளில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் இதுபோன்ற அளவீடுகளை வேறு அளவீடுகளில் குறிப்பிடுவதில் பல சிரமங்கள் இருப்பதுண்டு.
* ஒரு மனை அல்லது நிலத்தை எடுத்துக்கொண்டால் அதற்கு நான்கு எல்லைகள் இருக்கும். இப்போது நான்கு எல்லைகள் கொண்ட நிலத்தை எவ்வாறு கணக்கிடுவது என விரிவாக காணலாம்.
சம அளவு வீட்டு மனை
ஒரு மனையானது நான்கு எல்லைகள் கொண்டதாகவும், அந்த நான்கு பக்கங்களும் சம அளவுடன் இருந்தால், அந்த மனையின் நீள, அகலத்தை கணக்கிட்டால் (பெருக்கினால்) மொத்த அளவுகள் கிடைத்துவிடும்.
உதாரணமாக..
ஒரு மனையின் நீளம் 70 அடிகள், அகலம் 25 அடிகள் என்றால் அந்த மனையின் மொத்த அளவானது (70x25) 1750 சதுர அடியாகும்.
வெவ்வேறு அளவுகள் கொண்ட வீட்டு மனை
ஒரு மனையானது நான்கு எல்லைகள் கொண்டதாகவும், அந்த நான்கு பக்கங்களும் வெவ்வேறு அளவுடன் இருந்தால், மனையில் நீளவாக்கில் எதிரெதிராக உள்ள இரு பக்கங்களையும் கூட்டிக்கொண்டு, அந்த விடையை இரண்டால் வகுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல அகலவாக்கில் எதிரெதிராக உள்ள இரு பக்கங்களையும் கூட்டிக்கொண்டு, அந்த விடையை இரண்டால் வகுத்து கொள்ள வேண்டும். தற்போது கிடைத்துள்ள இரண்டு விடையையும் பெருக்கினால் மனையின் மொத்த அளவுகள் கிடைத்துவிடும்.
உதாரணமாக..
ஒரு மனையின் இரு பக்க நீளங்கள் 44 மற்றும் 40 என்றும், பக்க அகலங்கள் 20 மற்றும் 28 என்றும் எடுத்துக்கொண்டால்...,
* பக்க நீளங்களின் கூட்டல் - (44+40)=84, அதை இரண்டால் வகுத்தால் 42
* பக்க அகலங்களின் கூட்டல் - (20+28)=48, அதை இரண்டால் வகுத்தால் 24
* எனவே விடைகளை பெருக்கினால் (42x24) கிடைக்கும் 1008 சதுர அடி என்பதுதான் மனையின் மொத்த அளவாகும்.
சென்ட் அளவு
* ஒரு சென்ட் என்பது 435.6 சதுர அடியாக கணக்கிடப்படுகிறது.
* ஒரு ஏக்கர் என்பது 100 சென்ட் கொண்டதாகும். அதை சதுர அடியில் குறிப்பிட்டால், ஒரு ஏக்கர் என்பது 43560 சதுர அடிகள் ஆகும்.
* எனவே ஒரு மனையின் மொத்த சதுர அடி அளவை 435.6 என்ற அளவால் வகுக்க, கிடைக்கும் அளவே அந்த மனையின் மொத்த சென்ட் அளவாகும்.
உதாரணமாக...
* ஒரு மனையின் சதுர அடி 1350 என்றால்..
* அதை 435.6 என்ற அளவால் வகுக்க வேண்டும். வகுத்தால் கிடைக்கும் அளவு 3.09 (3 சென்ட்) என்பதுதான் மனையின் சென்ட் அளவாகும்.
கிரவுண்ட் அளவு
ஒரு கிரவுண்ட் என்பது 2400 சதுர அடிகள் கொண்டதாகும். ஆகவே மனையின் மொத்த சதுர அடி அளவை 2400 என்ற அளவால் வகுத்தால் கிடைப்பது மனைக்கான கிரவுண்ட் அளவு ஆகும்.
உதாரணமாக..
* ஒரு மனையின் சதுர அடி 1350 என்றால்..
* அதை 2400 என்ற அளவால் வகுக்க வேண்டும். வகுத்தால் கிடைக்கும் 0.56 என்ற அளவை அரை கிரவுண்ட் என கூறலாம்.
* தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறு அளவுகள் மற்றும் பரப்பு
அளவு மற்றும் பரப்பு:
* 1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்
* 1 ஹெக்டேர் - 10,000 சதுர மீட்டர்
* 1 ஏக்கர் - 0.405 ஹெக்டேர்
* 1 ஏக்கர் - 4046.82 சதுர மீட்டர்
* 1 ஏக்கர் - 43,560 சதுர அடிகள்
* 1 ஏக்கர் - 100 சென்ட்
* 1 சென்ட் - 435.6 சதுர அடிகள்
* 1 சென்ட் - 40.5 சதுர மீட்டர்
* 1 கிரவுண்ட் - 222.96 சதுர மீட்டர்
* 1 கிரவுண்ட் - 2400 சதுர அடிகள்
* 1 மீட்டர் - 3.281 அடி
* 1 குழி - 44 சென்ட்
* 1 மா - 100 குழி
* 1 காணி - 132 சென்ட் (3 குழி)
* 1 காணி - 1.32 ஏக்கர்
* 1 காணி - 57,499 சதுர அடி
* 1 டிசிமல் - 1 1/2 சென்ட்
* 1 அடி - 12 இன்ச் (30.38 செ.மீ)
* 1 இன்ச் - 2.54 செ.மீ
* 1 சதுர மீட்டர் - 10.76391 சதுர அடிகள்
* 1 சதுர அடி - 0.0929 சதுர மீட்டர்
* 640 ஏக்கர் - 1 சதுர மைல்
கருத்துகள் இல்லை