வீடுகட்டும் முன் - வீடு கட்டும் செலவை குறைக்க உதவும் லாரி பேக்கர் தொழில்நுட்பம்

                 நம் வீடுகட்டுவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் அதில் மிகவும் முக்கியமானவை கட்டிடம் கட்டும்போது அதற்கான தேவைகளை அறிந்து அதற்கு ஏற்றவாறு கட்டுவதன் மூலம் நாம் செலவினை குறைக்கலாம். அவ்வாறு கட்டுமான செலவினங்களை குறைக்க உதவும் முறைகளில் சிலவற்றை பற்றி இங்கு காண்போம்.

அமைப்பு :

                 * கட்டிடத்தின் அமைப்பும் கட்டுமான செலவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக 20 மீ^2 அளவுள்ள ஒரு கட்டிடத்தை 4 மீ அகலமும் 5 மீ நீளமுமாக சதுர வடிவில் அமைத்தால் கட்டுமான செலவு மிகவும் கூடும். ஏனென்றால் சுவரின் சுற்றளவு (Perimeter) 18 மீ வரும் இதையே செவ்வக வடிவிலோ, அரை வட்ட அல்லது வட்ட வடிவில் அமைத்தால் சுவரின் சுற்றளவு குறையும்.

                 * தேவையான ஏரியாவும் நமக்கு கிடைக்கிறது, அதே சமயம் சுவரின் சுற்றளவு குறைவதால் செங்கல் கட்டும் கணிசமான அளவில் குறைகிறது. கீழ்காணும் அட்டவணையில் 20 மீ^2 பயன்பாட்டு ஏரியாவிற்கு பல அமைப்புகளில் (Shape) வெளிச்சுவர்களின் சுற்றளவு மீட்டரில் கொடுக்கப்பட்டுள்ளது.

                 * இதில் சதுரமான அமைப்பை விட செவ்வகமான மற்றும் வட்ட வடிவ அமைப்பே செலவை குறைக்கும் வழிமுறைகளில் சிறந்தது என அறியலாம். (இந்த அமைப்பில் செவ்வகத்தை விட சதுர அமைப்பே சுவரின் சுற்றளவு குறைவாக வருகிறது.)

                 * வட்ட வடிவமும் செவ்வக அமைப்பும் ஒரே சுற்றளவுதான் என்றாலும் நம்முடைய தேவைகளை கருத்தில் கொண்டு அமைப்புகளை முடிவு செய்வது நலம். ஒரே கட்டிட ஏரியா அதன் அமைப்பின் மூலம் மனையில் அதிக அளவு காலியிடத்தை ஏற்படுத்துகிறது.

                 * நமக்கு தேவையான இடமும் கிடைக்கும் அதே நேரத்தில் அதிக அளவு காலியிடங்களின் மூலம் வீட்டிற்கு கிடைக்கும் காற்றோட்டமும் அதிகரிக்கும். ஆரோக்கியமாக வாழ்வதற்கு வீட்டினுள் கிடைக்கும் காற்றோட்டம் முக்கிய பங்காக அமைகிறது.

செங்கல் சுவர் :

                * செங்கல் சுவர்களை பூசாமல் விடுவதன் மூலம் கணிசமான அளவு செலவை குறைக்கலாம். செங்கல் சுவர்களுக்கு அது போன்ற பூச்சானது தேவையில்லை. இப்படிப் பூசிய வீடுகளில் வெயிலில் உள்ளே வெப்பமும் மழையில் உள்ளே குளிருமாக உள்ளது.

                * அவ்வாறு சுவரைப் பூசாமல் விட்டால் மழைக் காலத்தில் வீட்டின் உள்ளே வெப்பமாகவும் வெயில் காலத்தில் உள்ளே குளிர்ச்சியாகவும் இருக்கும். செலவும் குறைவு.

                * செங்கல் கட்டும்போது வழக்கமான "இங்கிலீஸ் பாண்ட் (Engilish Bond)" க்கு பதிலாக "ரேட் டிராப் பாண்ட் (Rat trap Bond)" உபயோகித்தால் செலவும் குறையும், அதே நேரத்தில் சுவரில் கேவிட்டி அமைப்பும் இருப்பதால் எந்த விதமான தட்பவெப்ப நிலைக்கும் வீட்டினுள் இதமான அமைப்பை ஏற்படுத்துகிறது.

ரேட் டிராப் பாண்ட் (Rat trap Bond) :

                  * சுவரில் டைல்ஸ் ஒட்டவே கூடாது. அது சுவர்களின் சுவாசத்தைக் கெடுக்கும். வீட்டுக்குள் காற்று வராது. அதனால்தான் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றவர்கள், திரும்பி வந்ததும் மின்விசிறியைப் போட்டுக்கொள்கிறார்கள். வீடு, இறுக்கமாக இருப்பதால் அதில் வசிப்போருக்கு நிறைய நோய்களும் வருகின்றன.

                  * லாரி பேக்கர் கட்டிய உயர்தர விடுதிகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவ நிலையங்கள் போன்றவை இயற்கை சூழலுடன் இணைந்து ஆடம்பரம் இல்லாத அழகுடன் திகழ்பவை. மருத்துவர்கள் லாரிபேக்கர் பாணி கட்டிடங்கள் நோயாளிகளுக்கு ஆறுதலானவையாக இருப்பதாக கூறிகிறார்கள்.

                  * குளிரூட்டும் வசதிக்காக லாரி பேக்கர் உருவாக்கிய உத்தியும் அபாரமானது. வீட்டுக்குள் சிறிய குளம் ஒன்றை உருவாக்கி அதனை சுற்றி சுட்ட செங்கலால் ஆன சுவரை அமைத்து விடுவார். அது நீரை உறிஞ்சி குளிர்ந்து வெளிவிட்டு குளிரூட்டும் பணியை செய்யும்.

வீடு கட்டும் செலவை குறைக்க உதவும் லாரி பேக்கர் தொழில்நுட்பம்

கருத்துகள் இல்லை