கடன் & அரசுத்திட்டங்கள் - வீடு கட்ட கடன் & அரசு திட்டங்கள்

                * சொந்த வீடு கட்டுவது என்பது இன்றைக்குப் பெரும் சவாலான காரியம். வீட்டுக் கடன் வாங்குவது, கட்டுனரைத் தேர்ந்தெடுப்பது எனப் பரபரப்பாக இருக்கும் சூழல்களில் நிதானமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

               * நீங்கள் கட்டும் வீடானது உங்களுடைய ஒரு ஆயுளைக் கழிக்கப்போகும் வீடு, அதனால் நாம் நமக்கான வீட்டை நம் விருப்பப்படி தான் கட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

               * நீங்கள் உங்கள் கனவு வீட்டை வாங்கவோ அல்லது புதிதாக உருவாக்கவோ அல்லது உங்கள் தற்போதைய வீட்டை புதுப்பிக்கவோ விரும்பினால், இந்த அம்சங்கள் நிறைந்த வீட்டுக் கடன் அதற்கு சரியான தேர்வாக அமைகிறது.

வீட்டுக் கடன் :

                 * சொந்த வீடு வாங்க நினைக்கும் நடுத்தர மக்கள் பலரும் வீட்டுக் கடனையே நம்பியிருப் பார்கள். வங்கிகளும் இப்போது தாராளமாகக் கடன் கொடுக்க முன் வருகின்றனர்.

                 * வங்கிக் கடனை வாங்குவதில் கவனிக்கத்தக்க விஷயங்கள்

                 * வீட்டுக் கடனிற்கு விண்ணப்பிக்கும் முறைகள்

                 * வீட்டுக் கடன் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள.

வங்கிக் கடனை வாங்குவதில் கவனிக்கத்தக்க விஷயங்கள் :

                  * வட்டி விகிதம்

                  * செயலாக்கக் கட்டணம்

                  * கடன் ஒப்புதல் காலம்

                  * தாமத இ.எம்.ஐ-க்கான அபராதம்

                 * கடன் விதிமுறைகள்

                 * முன்கூட்டியே கடனை அடைப்பதற்கான கட்டணம்

                 * கடன் மதிப்பீடு

                 * வட்டி எவ்வளவு?

                 * ‘ப்ரீ இ.எம்.ஐ’ கவனம்!

                 * காசோலையில் கவனம்!

                 * ஸ்டெப் பை ஸ்டெப்!

                 * கடன் மூலம் வீடு வாங்க வேண்டுமா?

                 * எவ்வளவு கடன் வாங்கலாம்.

                 * வீட்டுக் கடனுக்கு ஒப்புதல் அளிப்பது பெரும்பாலும் வங்கிக் கிளையாகத்தான் இருக்கும். இருப்பினும், உங்களுடைய கடன் விண்ணப்பத்திற்கான ஒப்புதல் எங்கிருந்து கிடைக்கிறது என்பதை கவனிப்பது முக்கியம். உங்கள் வங்கிக் கிளையே கடன் வழங்கிவிடுமென்றால், விரைவாகக் கடன் கிடைத்துவிடும்.

                 * மற்ற வங்கிக் கடனைப் போல் அல்லாமல் வீட்டுக் கடனை கூடுதல் கால அவகாசத்தில் திருப்பிச் செலுத்த முடியும். அதாவது பொதுவாக 5 ஆண்டுகளில் இருந்து 25 ஆண்டுகளிலும், சில நேரங்களில் 30 ஆண்டுகளிலும் திருப்பிச் செலுத்தக்கூடிய வசதி இருக்கிறது. கடனைத் திருப்பிக் கட்டுவதற்குப் போதிய அவகாசம் கொடுத்தாலும், சில நிபந்தனைகள் உண்டு.

                 * கடன் பெறும் நபர், பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்குள் இ.எம்.ஐ. முடிந்துவிடுமா என்பதை வங்கிகள் முக்கியமாகப் பார்க்கின்றன. ஒருவேளை பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், இ.எம்.ஐ. செலுத்துவதற்கான வருமானம் இருக்குமேயானால், அதிகபட்சம் 70 வயது வரை கூடக் கடனை அடைக்க அவகாசம் தரப்படுகிறது.

                 * ஆனால் கடன் பெறும் நபர், 60 வயதைக் கடந்தவர்கள் வீட்டுக் கடன் வேண்டி விண்ணப்பிக்கும்போது அவர்களுடைய கடன் அடைக்கும் கால அவகாசம் கூடுதலாகத் தர வங்கிகள் பொதுவாக முன் வருவதில்லை. இல்லையெனில் அவருடைய வாரிசுகள் இந்தக் கடனுக்கு எழுத்துப்பூர்வமாக உத்திரவாதம் கொடுக்க முன்வந்தால் 60 வயதைக் கடந்தவர்களுக்கு வங்கிகள் கால அவகாசம் அளிக்கும் அல்லது கோ-ஃபாலோயர் எனப்படும் கடன்தாரருக்கு இணையாகப் பொறுப்பை ஏற்கும் நபர், அதற்கான உத்திரவாதத்தை வங்கிக்குக் கொடுக்க வேண்டும்.

                 * கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குத் தேவையான அளவு நமது வருமானம் இருக்கிறதா என்பதையும் வங்கிகள் பரிசீலிக்கின்றன.

                 * நமது மாதச் சம்பளத்தில் அல்லது மாத வருமானத்தில் இருந்து உத்தேச வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ., பி.எஃப். உள்ளிட்ட அனைத்து வகை பிடித்தங்களும் போக, நாம் நமது சம்பளத்தில் குறைந்தபட்சம் 45 சதவீதமாவது குடும்பச் செலவுகளுக்காக எடுத்துச் செல்கிறோமா என்பதை உறுதி செய்த பிறகே வீட்டுக் கடன் கொடுக்கப்படுகிறது.

                 * காரணம், இ.எம்.ஐ. கட்டுவதால் நமது அன்றாட குடும்பச் செலவுக்குப் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது மற்றும் குடும்பச் செலவுக்குக் கடன் வாங்கும் நிலை ஏற்படக்கூடாது என்பதுதான்.

வீட்டுக் கடனிற்கு விண்ணப்பிக்கும் முறைகள் :

                 ஊதியம் பெறும் தனிநபர்களாக இருந்தால், நீங்கள் வீட்டுக்கடனிற்கு விண்ணப்பிக்கும் போது இந்த படிநிலைகளை பின்பற்ற வேண்டும்.

நிலை 1 :

                 முக்கிய நிதி, தனிப்பட்ட மற்றும் வேலைவாய்ப்பு தகவலை அவற்றின் தொடர்புடைய பிரிவுகளில் உள்ளிடவும்.

நிலை 2 :

                 நீங்கள் பெறக்கூடிய வீட்டுக் கடனிற்கான வட்டி அடிப்படையில் மொத்த செலவினங்களுடன் நீங்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய மாதாந்திர EMI-களைப் பற்றி முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்..

நிலை 3 :

                  வீடு கட்ட தேர்வு செய்யப்பட்ட சொத்து குறித்த விவரங்களை அதன் பின் நீங்கள் அளிக்க வேண்டும்.

வங்கிகளால் தரப்படும் பல்வேறு வகையான கடன்கள் :

                  * வீட்டு மனை கடன்

                  * வீட்டுக்கடன்

                  * வீடு கட்ட கடன்

                  * டாப் அப் லோன்

                  * வீட்டு விரிவாக்க கடன்

                  * வீடு மேம்பாட்டு கடன்

                  * ஸ்டாம்ப் டியூட்டி லோன்

                  * பிரிட்ஜ் லோன்

                  * ஹோம் ரீ-மாடல் லோன்

                  * வீட்டு அடமானக் கடன்

                  * வாடகை வருமான கடன்

                  * ரிவர்ஸ் மார்ட்கேஜ் லோன.

வீட்டு மனை கடன் :

                நிலம் அல்லது மனை வாங்குவதற்கான கடனை, விண்ணப்பதாரர் வீடு கட்ட திட்டமிட்டதன் அடிப்படையில் இந்த கடன் அளிக்கப்படுகிறது.

வீட்டுக்கடன் :

                 இந்த கடன் தொகையை தனி வீடு மட்டுமல்லாமல் அடுக்குமாடி வீடு (பிளாட்) வாங்கவும் பயன்படுத்த இயலும். பொதுவாக, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், வீட்டின் சந்தை மதிப்பில், 80 முதல் 85 சதவிகிதத்தை வீட்டுக் கடன் தொகையாக அளிக்கின்றன.

வீடு கட்ட கடன் :

                 கடன் பெற விரும்பும் விண்ணப்பதாரர் தனக்கு சொந்தமான அல்லது இணை சொந்தமாக உள்ள நிலத்தில் வீடு கட்ட வழங்கப்படும் கடன் இதுவாகும்.

டாப் அப் லோன் :

                முன்னரே பெறப்பட்ட வீட்டுக் கடனை திருப்பி செலுத்தும் காலகட்டத்தில், அதே கடன் கணக்கில், மற்றொரு கடனை பெறும் முறை இதுவாகும். முந்தைய கடனை சரியாக திருப்பி செலுத்தி வருவதன் அடிப்படையில் இவ்வகை கடன் அளிக்கப்படுகிறது.

வீட்டு விரிவாக்க கடன் :

                ஏற்கனவே, கட்டப்பட்ட சொந்த வீட்டின் குறிப்பிட்ட பகுதியை சீரமைக்க அல்லது விரிவாக்கம் செய்ய தரப்படும் கடன் இதுவாகும். மேல்மாடி, புதிய அறை, பால்கனி என்று அனைத்து விதமான கூடுதல் கட்டமைப்புகளுக்கும் இந்த கடனை பெற இயலும்.

வீடு மேம்பாட்டு கடன் :

                 சொந்த வீட்டை புதுப்பிக்க தரப்படும் இவ்வகை கடன் ஹோம் இம்ப்ருவ்மென்ட் லோன் என்று குறிப்பிடப்படுகிறது. வீட்டை பழுது பார்ப்பது, போர் வெல் அமைப்பது போன்றவை இதில் அடங்கும். வீடுகள் பாரமரிப்பு என்ற அடிப்படையில் வெள்ளையடிப்பதற்கான இம்ப்ரூவ்மென்ட் கடனும் வங்கிகளால் வழங்கப்படுகிறது.

ஸ்டாம்ப் டியூட்டி லோன் :

                 வீடு அல்லது வீட்டு மனை வாங்கும் சமயங்களில், பத்திர பதிவுக்கான செலவுகளை சமாளிக்க ஸ்டாம்ப் டியூட்டி செலுத்துவதற்கு இவ்வகை கடனை வங்கிகள் அளிக்கின்றன. பிறகு, வங்கி அறிவித்த தவணை காலத்திற்குள், வட்டியுடன் கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும்.

பிரிட்ஜ் லோன் :

                 குறுகிய காலத்திற்குள் பழைய வீட்டை விற்பனை செய்து விட்டு புதிய வீடு வாங்கும் சூழலில் பட்ஜெட் பற்றாக்குறையை சரி செய்ய வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களால் அளிக்கப்படும் கடன் திட்டம் பிரிட்ஜ் லோன் (ஹோம் ஷார்ட் டேர்ம் பிரிட்ஜ் லோன்) ஆகும்.

ஹோம் ரீ-மாடல் லோன் :

                 கூடுதல் வசதிகளை வீட்டில் அமைக்க வேண்டிய நிலையில் வங்கிகள் இவ்வகை கடனை தருகின்றன. பெயிண்டிங் அல்லது ஒயிட் வாஷ் செய்வது, கதவு, ஜன்னல்களை மாற்றி அமைப்பது, மாடுலர் கிச்சன் அமைப்பது புதிய மின்சார வசதி அல்லது எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவது போன்றவற்றின் அடிப்படையில் இக்கடன் கிடைக்கும்.

வீட்டு அடமானக் கடன் :

                  குடும்பத்தினர்களுக்கான மருத்துவ செலவு, பிள்ளைகள் படிப்பு மற்றும் திருமணம், வர்த்தக நிறுவனங்கள் தொடங்க அல்லது அவற்றை விரிவாக்கம் செய்ய என்று பல நிலைகளில் இவ்வகை கடன் பெறலாம்.

வாடகை வருமான கடன் :

                 சொந்த வீட்டின் வருங்கால வாடகையை அடிப்படையாக கொண்டு இவ்வகை கடன் அளிக்கப்படுகிறது. வீட்டு வாடகை ஒப்பந்த காலத்திற்கான மொத்த வாடகை மதிப்பில் 75 சதவிகிதம் வரை, பொதுவான தேவைகளுக்காக இக்கடன் தரப்படுகிறது.

ரிவர்ஸ் மார்ட்கேஜ் லோன் :

                  சொந்த வீடு இருக்கும் நிலையில் இதர வருமானங்கள் ஏதுமற்ற நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தரப்படும் வங்கிக் கடன் ரிவர்ஸ் மார்ட்கேஜ் லோன் ஆகும். தங்களது வீட்டை வங்கிக்கு அடமானமாக வைத்து அவர்களது ஆயுள் காலம் வரையில் குறிப்பிட்ட தொகையை வங்கியிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

வீட்டுக் கடன் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :

                  * பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பப் படிவம்

                  * விண்ணப்பதாரரின் ஒளிப்படம்

                  * ஒளிப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று

                  * முகவரிச் சான்று

                  * வருமானச் சான்று

                  * மனைப் பத்திரம் (சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த பத்திரம்)

                  * தாய்ப் பத்திரம் (தற்போதைய பத்திரத்துக்கு முந்தைய மனைப் பத்திரம்)

                  * 13 ஆண்டுகளுக்குக் குறையாத வில்லங்கச் சான்றிதழ் (ஈ.சி)

                  * விற்பனைப் பத்திரத்தின் நகல்

                  * சட்ட வல்லுநரின் கருத்து (லீகல் ஒபீனியன்)

                  * உரிய அதிகாரியிடன் (சி.எம்.டி.ஏ அல்லது டிடிசிபி அதிகாரிகளிடம்) பெறப்பட்ட மனைக்கு உண்டான வரைபடம் அங்கீகார நகல்

                  * கட்டுமானச் செலவு அல்லது வீட்டின் மதிப்பீடு பற்றிய பொறியாளர் அறிக்கை (வேல்யூவேஷன் ரிப்போர்ட்)

                  * இவற்றை வங்கிகளில் ஒரே நேரத்தில் தாக்கல் செய்துவிட்டால், வங்கியில் கடன் வாங்க ஆகும் காலத் தாமதத்தை நிச்சயமாகத் தவிர்க்கலாம். கடனை விரைவாக வாங்கி வீட்டைக் கட்டி முடிக்கலாம்.

கட்டுமான ஒப்பந்த முக்கிய தகவல்கள் :

                 * வாடிக்கையாளருக்கும் கட்டுமான ஒப்பந்ததாரருக்கும் இடையில் முறையான கட்டுமான ஒப்பந்தம் (CONSTRUCTION AGREEMENT) ஏற்படுத்திக் கொள்ளாததால், பல வீட்டுக் கட்டுமானப் பணிகள் சிக்கலாவதுண்டு.

                 * சட்டவிதிகளை உண்டாக்கி அதனை நெறிப்படுத்த தனித்துறைகளை அமைக்கும் சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம். எனவே, வேலை தொடங்கும் முன்பாக இரண்டு தரப்பிலும் ஒப்புக்கொண்ட தகவல்களை ஒரு பத்திரத்தில் எழுதிக் கையெழுத்திட்டு வைத்துக்கொள்வது இருவருக்குமே மிகவும் நல்லது.

கட்டுமான ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டிய முக்கிய விஷயங்கள் :

                 * வீட்டு உரிமையாளர், ஒப்பந்ததாரரின் பெயர், தகப்பனார்/கணவர் பெயர், வயது, முகவரி, ஆதார் எண் போன்ற அடிப்படைத் தகவல்கள்.

                 * நாம் வீடு கட்டப்போகும் இடம் பற்றிய முழு விவரம்.

                 * கட்டுமான வேலையின் மொத்த மதிப்பு (TOTAL CONTRACT VALUE). எந்தெந்தத் தனிப்பட்ட வேலைக்கு எவ்வளவு என்கிற விவரம். உதாரணத்துக்குச் சதுர அடி முறையில் வேலை என்றால், கூடுதலாக வர வாய்ப்புள்ள தண்ணீர்த் தொட்டி, கழிவுநீர்த் தொட்டி, சுற்றுச்சுவர் உள்ளிட்ட வேலைகள் குறித்த தனிச் செலவுகள் பற்றிய குறிப்புகள்.

                 * எந்தெந்த வேலை முடிந்த பின் எவ்வளவு சதவீதப் பணம் கொடுக்கப்பட வேண்டும் (PAYMENT STAGES) என்பது பற்றிய தெளிவான குறிப்பு. எந்தெந்த நாட்களில் பணம் கொடுக்க வேண்டிய கட்டுமான நிறைவு எட்டப்படும் என்கிற விவரமும் எழுதப்படுவது சாலச் சிறந்தது.

                 * தரம், கட்டுமானப் பொருட்கள் குறித்த விரிவான விவரம் (DETAILED SPECIFICATIONS). உதாரணத்துக்குத் தரையில் பதிக்கக்கூடிய டைல்ஸ் என்றால் அதன் விலை எவ்வளவு என்கிற விவரம். நீர்க் குழாய்கள், மின்சாரம் போன்ற பொருட்கள் என்றால், அவற்றின் BRAND மட்டுமல்லாமல் எந்த MODEL என்கிற கூடுதல் விவரம்.

                 * கட்டப்போகும் வீட்டின் மொத்த தளங்களின் வரைபடம். மொட்டை மாடியில் வரக்கூடிய படிக்கட்டுக்கு மேல் இருக்கும் HEAD ROOM உள்ளிட்டவை அடங்கிய மொத்த வரைபடங்கள். வாய்ப்பு இருப்பின் கம்பி வரைபடமும் (STRUCTURAL DRAWING) வெளிப்புறத் தோற்ற வரைபடமும் (ELEVATION) இணைப்பது சிறப்பு.

                 * எந்தெந்த வேலைகள் இந்தக் கட்டுமான ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட பணத்தில் செய்து தர முடியாது என்கிற விவரம். உதாரணம்: உள் அலங்கார வேலைகள் (INTERIOR WORKS, MODULAR KITCHEN).

                 * வீடு கட்டத் தேவையான கால அளவு - எத்தனை மாதங்கள் என்ற விவரம். ஒரு வேளை காலம் கடந்தால் கூடுதல் கால கட்டத்துக்கு ஒப்பந்ததாரர் கொடுக்க வேண்டிய ஈட்டுப் பணம் (COMPENSATION).

                 * வீட்டு வேலை நடக்கும் கால கட்டத்தில் ஒரு வேளை அடிப்படைக் கட்டுமானப் பொருட்கள் விலையேற்றம் ஏற்பட்டால் அதை யார் பொறுப்பு ஏற்கிறார்கள் என்கிற குறிப்பு. வீட்டு உரிமையாளர் - ஒப்பந்ததாரர் இருவரும் குறிப்பிட்ட விகிதத்தில் அதை ஏற்றுக் கொள்ளலாம்.

                 * வீட்டு உரிமையாளர் - ஒப்பந்ததாரர் தவிர இரண்டு சாட்சிதாரர்களின் கையொப்பமும் அவர்களின் தெளிவான விவரங்களும் (பெயர் முகவரி).

                 * ஒரு சட்ட வல்லுநருடன் கலந்து ஆலோசனை செய்து கட்டுமான ஒப்பந்தத்தை அமைத்துக் கொள்வதன் மூலம் வீடு கட்டும் வேலையை மேலும் எளிமைப்படுத்தும்.

வீடு கட்ட கடன் & அரசு திட்டங்கள்

கருத்துகள் இல்லை