பொதுவான தகவல்கள் - வீட்டினுடைய பாதுகாப்பிற்காக செய்ய வேண்டியவை

                  வீட்டு மனை வாங்கி, வீடு கட்டி, அதில் குடியேறி, ஒருவழியாக எல்லாம் முடிந்தது என்றால் இந்த திருடர்களிடமிருந்தும் வீட்டை பாதுகாக்க வேண்டும். அவர்களிடம் இருந்து எவ்வாறு வீட்டை பாதுகாப்பது என்று பார்ப்போம்.

                * வீட்டை கட்டியவுடன் வீட்டில் Home alarm system பொருத்த வேண்டும். ஏனென்றால் அவை திருடர்களிடமிருந்து வீட்டை பாதுகாப்பதில் மிக முக்கிய பங்காற்றுகிறது. ஒவ்வொரு முறை வீட்டைவிட்டு வெலியே செல்லும் போதும் Home alarm system உபயோக நிலையில் இருக்கிறதா என உறுதிப்படுத்தவும்.

                * வீட்டின் உள்ளேயும் வெளியேயும் CCTV கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தலாம். உங்கள் வீட்டில் பொருத்திவிட்டு நீங்கள் வெளியில் செல்லும்போது உங்கள் தொலைபேசி மூலமாகவே வீட்டைக் கண்காணிக்க முடியும்.

                * உங்கள் வீட்டில் CCTV கேமராக்கள் மற்றும் Home alarm system இல்லை என்றாலும் உங்கள் வீட்டில் அவை இருக்கிறது என்பதை தெரிவிக்கும் விதமாக Sticker களை வீட்டின் வெளியே ஒட்டிவிடலாம்.

                * தரம் உயர்ந்த பூட்டுக்களையே வீட்டில் பயன்படுத்த வேண்டும்.

                * எப்பொழுதும் வீட்டில் ஆட்கள் இருப்பதைப் போல காட்டிக்கொள்வது மிக முக்கியம். இதற்கு வானொலி அல்லது தொலைக்காட்சியை இயங்கும் நிலையில் வைக்கலாம். அத்துடன் Automatic timers உதவியுடன் இரவு நேரங்களில் மின்விளக்குகள் வீட்டுக்குள் ஒளிரும்படி பார்த்துக்கொள்ளலாம்.

                * வெளியில் செல்வதற்கு முன்னரும் தூங்கப்போவதற்கு முன்னரும் எல்லாக் கதவுகளும் ஜன்னல்களும் பூட்டப்பட்டிருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

                * வீட்டின் முன்பக்கமும் பின்பக்கமும் பூற்கள் மற்றும் புதர்கள் இல்லாமல் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.

                * வீட்டின் முன்பும் பின்பும் Motion-sensitive light- அதாவது அசைவுகளை உணரும் மின்விளக்குகளைப் பொருத்தலாம்.

                * வீட்டிலுள்ள பொருட்களை புகைப்படமாகவோ காணொளியாகவோ பதிவு செய்து வைக்க வேண்டும். திருடுபோகும் பட்சத்தில் காவல்துறைக்கும் காப்பீட்டு நிறுவனத்திற்கும் அதை கண்டுபிடிக்க உதவியாக அமையும்.

                * வீட்டிலுள்ள ஏதாவதொரு கணணியில் GPS tracking device ஐ பொருத்திவிடலாம். இதன்மூலம் திருடன் உங்கள் கணினியை எங்கே எடுத்துச் சென்றிருக்கிறான் என்பதை கண்டுபிடிக்கலாம்.

                * வீட்டின் அழைப்புமணி ஒலித்தால் உடனடியாக கதவைத் திறக்காமல் வெளியே யார் இருக்கிறார்கள் என்பதை உள்ளிருந்தபடியே ஏதாவதொரு வழியில் பார்த்துவிட்டு பின்னர் கதவை திறக்கவும்.

                * உங்கள் வீட்டிலுள்ள பொருட்களை காப்புறுதி-Home contents insurance செய்து வைத்திருப்பது சாலச்சிறந்தது.

                * இவற்றைக் காட்டிலும் நாய் வளர்ப்பது சிறந்தது. நாய் திருடர்களை சுலபமாக மோப்பம் பிடித்துவிடும். எனவே நாய் வளர்ப்பதற்கு வாய்ப்பு உள்ளவர்கள் அதை வளர்க்கலாம்.

வீட்டினுடைய பாதுகாப்பிற்காக செய்ய வேண்டியவை (security systems)

கருத்துகள் இல்லை