வீடுகட்டும் போது - வீடு கட்டும் முறைகள் என்ன?
* கடக்கால் வீடு கட்ட தேவையான பொருட்கள் என்ன?
* பில்லர் அமைத்து வீடு கட்ட தேவையான பொருட்கள் என்ன?
* கூறை வீடு கட்ட தேவையான பொருட்கள் என்ன?
* ஓட்டு வீடு கட்ட தேவையான பொருட்கள் என்ன?
* மாடி வீடு கட்ட தேவையான பொருட்கள் என்ன?
* அடுக்குமாடி கட்ட தேவையான பொருட்கள் என்ன?
வீடு கட்டும் முறைகள் என்ன?
இரண்டு முறைகளில் வீடு கட்டலாம். வீடு எந்த அமைப்பில் கட்ட வேண்டும் என்று முதலில் தீர்மானிக்க வேண்டும்.
1) கடக்கால் முறை:
* கடக்கால் எடுத்து வீடு கட்டுவது நமது பாரம் பரிய முறை. கட்டும் வீட்டின் நீளம் மற்றும் அகலம் எத்தனை அறைகள் அமைக்க இருக்கின்றமோ அனைத்து அறைகளின் நீளம் மற்றும் அகலத்திற்கும் கடக்கால் குழி எடுக்க வேண்டும்.
* எடுக்கப்பட்ட கடக்கால் குழியை கற்களால் ஒரு அடி உயரம் முதலில் நிரப்பி அதன் மீது மண் கொட்டி நீர் பாய்ச்சும் போது மண் கற்களின் சந்துகளில் சென்று நிரம்பிவிடும். இப்படியாக ஒவ்வொரு அடியாக கற்கள் மற்றும் மண்ணால் நிரப்பி குழி முழுவதும் மூட வேண்டும்.
* கற்களை இரண்டு மூன்று அடிகளுக்கு மொத்தமாக கொட்டி மண் மற்றும் தண்ணீர் கலவை விட்டால் மண் கற்களின் சந்துகளில் சென்று நிரம்பாது. பொதுவாக கட்டுமான ஆட்கள் இப்படிதான் செய்வார்கள். அதற்கு அனுமதிக்காதீர்கள். கட்டிடம் வலு இருக்காது. பேஸ்மெண்ட் வீக்காகி நில நடுக்கம் போன்ற இயற்கை சீற்றத்தை தாக்கு பிடிக்காது. இதனை பேஸ்மெண்ட் போடுதல் என்றும் கூறுவார்கள்.
பேஸ்மெண்ட் அமைத்தல்
* பேஸ்மெண்ட் இரண்டு முறைகளில் அமைக்கலாம். மேற் கூறிய படி கற்கள் மற்றும் தண்ணீர் கொண்டு நிரப்புதல் மற்றொன்று சிமெண்ட் மற்றும் ஜல்லிகற்கள் கலவையால் நிரப்புதல். இரண்டும் ஒரே அளவு தரத்தை தான் கொடுக்கின்றன. சிமெண்ட் முதலில் அதிக வலுவுடையதாக இருந்தாலும் சில சிமெண்டின் தரம் நாளடைவில் வலு குறைகிறது. கடலோர பகுதிகளில் சிமெண்ட் பேஸ்மெண்ட் அமைப்பு சிறப்பு உடையதாக இருக்கும். மேலும் இயற்கை சீற்றத்தை எளிதில் தாக்கு பிடிக்கும்.
கடக்கால் எடுத்து வீடு கட்டும் முறைக்கு தேவையான பொருட்கள்:
* சதாரண கற்கள் (ரப்ஸ்டோன், மோடிகல், மோட்டா கற்கள் என்றும் கூறுவார்கள்)
* கடக்கால் மூடுவதற்க்கு செம்மண்
* கட்டுகள் (உளி கல், செவ்வக வடிவ கற்கள்)
* மேடை மண் (கிராவல் மண்)
* சிமெண்ட்
* ஆற்று மணல் அல்லது எம் சாண்ட் (கற்களை தூளாக்கி எடுப்பது)
* செங்கல்
* பூசுவதற்கு மென்மையான மணல் அல்லது டி சாண்ட்
* இரும்பு கம்பி
* நிலவுகள்
* ஜன்னல்
* கதவு
* டைல்ஸ்
* ஜல்லி கற்கள் 1/4, 1/2, 3/4, 1.5
* சிப்ஸ் ஜல்லி
* காம்பவுண்ட் கட்ட ஹேலோ பிரிக்ஸ் கற்கள்
* ஷெல்ஃப் (அலமாரி) அமைக்க கடப்பா கற்கள்
2) பில்லர் முறை:
* பில்லர் அமைக்க தேவையானவை:
* குழி எடுத்தல்
* சிமெண்ட்
* ஜல்லி கற்கள்
* ஆற்று மணல்
* தண்ணீர்
கட்டுமான கம்பிகள்
* பில்லர் அமைக்க குழி எடுக்கும் போது பூமியின் அடிபரப்பில் கடினமான பாறைகள் அல்லது இறுக்கமான மண் (இறுகலான சட்டு மண்) பரப்பு கிடைக்கும் வரை குழி தோண்ட வேண்டியது அவசியமானது. அதன் பின் சிமெண்ட், ஜல்லி, மணல் மற்றும் கம்பிகளை கொண்டு குழியில் தூண்கள் போன்ற அமைப்பினை ஏற்படுத்தி கொண்டு வரவேண்டும். பூமின் மேற்பரப்பு வரும்போது வீடு கட்டுமான அகலத்திற்க்கு சுற்றிலும் காங்கிரீட் பெல்ட் அமைக்க வேண்டும். அதன் பின்னரே வீடு கட்டும் பணியை தொடங்க வேண்டும்.
பில்லர் அமைத்து வீடு கட்டும் முறைக்கு தேவையான பொருட்கள்:
* மேடை மண் (கிராவல் மண்)
* சிமெண்ட் ஆற்று மணல் அல்லது எம் சாண்ட் (கற்களை தூளாக்கி எடுப்பது)
* செங்கல்
* பூசுவதற்கு மென்மையான மணல் அல்லது டி சாண்ட்
* இரும்பு கம்பி
* நிலவுகள்
* ஜன்னல்
* கதவு
* டைல்ஸ் அல்லது கிரானைட் கற்கள்
* ஜல்லி கற்கள் 1/4, 1/2, 3/4, 1.5
* சிப்ஸ் ஜல்லி
* காம்பவுண்ட் கட்ட ஹேலோ பிரிக்ஸ் கற்கள்
* ஷெல்ஃப் (அலமாரி) அமைக்க கடப்பா கற்கள்
* மரப் பலகைகள் அல்லது பிளைவுட்ஸ்
* பில்லர் குழி மூடுவதற்க்கு ரப்ஸ்டோன்
மேற்கூறிய பொருட்கள் அனைத்தும் பொதுவாக வீடு கட்ட தேவைபடுபவை, வீட்டின் அகலம் மற்றும் நீளத்தை பொருத்து அதன் தேவைகள் மாறுபடும்.
கூறை வீடு கட்ட தேவையான பொருட்கள் என்ன?
கூறை வீடு கட்ட கடக்கால் அமைப்பு பேஸ்மெண்ட் போதுமானது. கூறை வீடு கட்ட மேற்கூறிய பொருட்களுடன் (கடக்கால் முறை) கீழ்காணும் பொருட்கள் தேவைப்படும்.
* சட்டம்
* விட்டம்
* மரக் கைகள்
* ரீப்பர்
* பனை ஓலை அல்லது தென்னங்கீற்று
* வைக்கோல்
* கரும்பு சோவை (கரும்பு இலைகள்)
கரும்பு சோவையால் வேயப்பட்ட வீடு வெய்யில் காலங்களில் குளிர்ச்சியாகவும் மலை காலங்களில் வெது வெதுப்பாகவும் இருக்கும். பருவ நிலை மற்றும் இயற்கை சூழலுக்கு ஏற்றவாறு தன்னை தானே மாற்றி கொள்ளும் இயல்பு உடையதாக இருக்கின்றது. இது உடலுக்கு தேவையான வெப்பத்தையும், குளிர்ச்சியையும் கொடுக்கிறது. மிக சிறந்த வீடு. 4 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு அவசியம் தேவைப்படுகிறது. A/c மற்றும் மின் விசிறி தேவை இல்லை.
ஓட்டு வீடு கட்ட தேவையான பொருட்கள் என்ன?
* ஓட்டு வீடு நவீன கால வளர்ச்சியின் இரண்டாம் படி என்றே கூறலாம். இதற்கும் சாதாரண கடக்காலால் ஆன பேஸ்மெண்ட் போதுமானது. ஆனால், கூறை வீட்டை விட சற்று கூடுதல் செலவாகும்.
* மேற்கூறிய பொருட்களுடன் (கடக்கால் முறை) கீழ்காணும் பொருட்கள் தேவைப்படும்.
* ஓடு
* மரம்
* ரீப்பர்
* பனைமரத்து கைகள்
* சட்டம்
* விட்டம்
ஓட்டு வீட்டினால் நன்மைகள் குறைவு. பனி மற்றும் வெய்யில் காலங்களில் அந்தந்த பருவ நிலை அப்படியே வீட்டின் உட் புறத்திலும் நிலவும், பனிகாலத்தில் குளிர்ச்சி தன்மையை ஓடு ஈர்த்து வைத்து பகல் மற்றும் இரவில் குளிர்ச்சியாகவே இருக்கும், வெய்யில் காலங்களில் ஓடு சூட்டினை ஈர்த்து வைத்து பகல் மற்றும் இரவில் தொடர்ந்து அதே வெப்ப நிலையை கொடுப்பதால் கடுமையாக இருக்கும். இது உடலுக்கு உகந்தது அல்ல.
மாடி வீடு அல்லது அடுக்கு மாடி வீடுகள் வீடு கட்டும்போது தேவையான பொருட்கள் என்ன?
மாடி வீட்டிற்கு தளம் அமைக்க, மேற்கூறிய பொருட்களின் (கடக்கால் அல்லது பில்லர் முறை) அளவு அதிகமாக தேவைப்படும்.
மாடி வீடு, அடுக்கு மாடி வீடு, தார்ஸ் வீடுகள் கட்ட அதிக பணம் தேவைபடுகிறது. இவைகளும் ஓட்டு வீட்டை போல வெப்பம் மற்றும் குளிர்ச்சியை அப்படியே வீட்டின் உட்புறம் கடத்துகிறது. காலத்திற்கு ஏற்றது போல் தன்னை மாற்றி கொள்ளும் தன்மை இல்லை. வீட்டின் சுவர்களை அகலமாக அமைத்தால் வெப்பம் மற்றும் குளிர்ச்சியை கட்டுபடுத்த முடியும். அதற்கு குறைந்தது ஒன்றை அடி (36 செ.மீ) அகலம் உடைய சுவர் அமைக்க வேண்டும்.
அருமை . !நன்றி
பதிலளிநீக்கு